ETV Bharat / entertainment

காதல் மனைவியை பிரிகிறார் ஜிவி பிரகாஷ் குமார்? - GV PRAKASH DIVORCE - GV PRAKASH DIVORCE

GV PRAKASH AND SAINDHAVI DIVORCE தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியான இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகியான சைந்தவி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gv Prakash with his wife saindhavi
ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மனைவி சைந்தவி (CREDITS: Saindhavi Instagram page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 12:46 PM IST

சென்னை: இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரைத்துறையின் இசை அமைப்பாளர் பட்டியலில் முன்னணியில் உள்ளார். இவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

சமீப காலமாக இவர் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இசையமைப்பில் தற்போது தங்கலான், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன.

இவர் அவரது பள்ளித் தோழியும் தமிழ் திரைத்துறையின் பின்னணி பாடகியுமான சைந்தவியை 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரின் குடும்பத்தார்களுக்கு இடையேயான பிரச்சினையே இவர்களது பிரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இருவரின் பெற்றோர் வழியாக ஏற்பட்ட மனக்கசப்பினால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் விரைவில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத் துறையில் நட்சத்திர தம்பதியான இவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர்கள் கவின், மணிகண்டன் நடிப்பைப் புகழ்ந்த இயக்குநர் செல்வராகவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.