ETV Bharat / entertainment

விஜய் பிறந்தநாள்: தெறிக்கும் தீப்பொறி..! ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த 'கோட்' படக்குழு - Vijay GOAT update - VIJAY GOAT UPDATE

Vijay GOAT update: இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் சில காட்சிகளை TheGOATbdayshots என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது.

கோட் படப்பிடிப்பு கோப்புபடம்
கோட் படப்பிடிப்பு கோப்புபடம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:17 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று (ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் தற்போது ஏஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

கோட் (GOAT) என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோட் படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2வது சிங்கிள் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. 'சின்ன சின்ன கண்கள்' என்ற இரண்டாவது சிங்கிள் பாடலின் முன்னோட்டம் நேற்று வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பவதாரணி குரலை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக கோட் படத்தின் சில காட்சிகளை கோட் பர்த்டே ஷாட்ஸ் (GOAT BDAY SHOTS) என படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் விஜய் இரட்டை வேடத்தில் ஒரே பைக்கில் வந்து சண்டை போடும் ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. கோட் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரம் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் உள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விஜய் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் இன்று துப்பாக்கி படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளது. மேலும், விஜய்யின் பல திரைப்படங்கள் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், கள்ளக்குறிச்சி சம்பவத்தின் காரணமாக ரசிகர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோட் படத்தில் மறைந்த பவதாரணியின் குரல்: AI மூலம் படக்குழு உருவாக்கம்.. - goat 2nd single promo released

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.