ETV Bharat / entertainment

G.O.A.T 1st சிங்கிள் புரோமோ வெளியீடு.. நாளை பாடல் வெளியாகிறது! - GOAT MOVIE FIRST SINGLE promo - GOAT MOVIE FIRST SINGLE PROMO

G.O.A.T 1st Single Promo: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் 1st சிங்கிள் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

G.O.A.T 1ST Single
G.O.A.T 1ST சிங்கிள் ப்ரோமோ வெளியீடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 4:38 PM IST

Updated : Apr 13, 2024, 7:40 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற செப்.5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, வைபவ், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சித்தார்த்த நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் வருடப் புத்தாண்டை முன்னிட்டு, கோட் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை(ஏப்.14) வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் முதல் பாடலின் ப்ரோமோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் 'நாளை சம்பவம் உறுதி' எனவும் பதிவிட்டுள்ளார்.

கோட் படத்தின் முதல் பாடல் விஜயின் குரலில் பதிவாகி உள்ளதாக ப்ரோமோ வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலின் வரிகளைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி இருக்கலாம் எனவும் ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

முன்னதாக, இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து: 5 பேர் படுகொலை! என்ன நடந்தது? - Sydney Shopping Mall Attack

Last Updated : Apr 13, 2024, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.