ETV Bharat / entertainment

விடாமுயற்சி குறித்து புதிய அப்டேட் வந்தாச்சு.. என்ன தெரியுமா? - Vidamuyarchi - VIDAMUYARCHI

Vidaa Muyarchi: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்படிப்பு இந்த மாதம் இறுதிக்குள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படத்தின் போஸ்டர்
விடாமுயற்சி படத்தின் போஸ்டர் (credits - Magizh Thirumeni X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:51 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது இவரது நடிப்பில், விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன. இதில் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருவதால், நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்.

வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அஜித் குமார் தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், இம்முறை விடாமுயற்சி தாமதமாவதால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் ஒன்று வெளி வந்துள்ளது. இதன்படி, விடாமுயற்சி படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்குள் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் படக்குழுவினர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏனென்றால், குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்ததால், விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, அஜித் குமார் அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வரலட்சுமி - நிகோலய் சச்தே திருமணம்; ரஜினிக்கு சரத்குமார் நேரில் அழைப்பு! - Varalaxmi Sarathkumar Wedding

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.