ETV Bharat / entertainment

ஜிம்மில் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் சூர்யா, ஜோதிகா ஜோடி; வைரலாகும் வீடியோ! - suriya jyothika workout video - SURIYA JYOTHIKA WORKOUT VIDEO

Actor Suriya - Jyothika workout viral video: பிரபல சினிமா ஜோடிகளான சூர்யா, ஜோதிகா இணைந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜிம்மில் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் சூர்யா, ஜோதிகா ஜோடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 6:09 PM IST

சென்னை: தமிழ் சினிமா நடிகர்களில் சூர்யா, ஆர்யா, விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் குறிப்பாக சூர்யா கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் திரைப்படம் முதல் தன் உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரித்து வருகிறார். சூர்யா, வாரணம் ஆயிரம் படத்திற்காக 13 நாட்களில் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

நடிகர் சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார் யோகா பயிற்சியின் மூலம் வயதாகிவிட்ட போதும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில், நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். மேலும் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவும் சமீபகாலமாக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இதனை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வந்த நிலையில், தற்போது நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யாவுடன் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மாதவன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சூர்யா, ஜோதிகா ஜோடியை 'கணவர், மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும்' என புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களும் சூர்யா, ஜோதிகாவை பாராட்டி வருகின்றனர். சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது சுதா கொங்குரா இயக்கும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதேபோல் ஜோதிகா, அஜய் தேவ்கான், மாதவன் நடிப்பில் சைத்தான் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

இதையும் படிங்க: கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம்! - Kanguva First Single Release Date

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.