ETV Bharat / entertainment

தீபாவளி ரேஸில் ஆரவாரமின்றி வசூலை அள்ளும் 'லக்கி பாஸ்கர்'; காட்சிகள் அதிகரிப்பு! - LUCKY BASKHAR

Lucky baskhar shows increased: துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பின் காரணமாக தமிழ்நாட்டில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லக்கி பாஸ்கர் படத்தின் காட்சிகள் அதிகரிப்பு
லக்கி பாஸ்கர் படத்தின் காட்சிகள் அதிகரிப்பு (Credits - @SitharaEnts X Account, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 10:47 AM IST

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்க்டிகையன்று வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தனியார் வங்கி ஊழியரான துல்கர் சல்மான் பணக் கஷ்டம் காரணமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பதவி உயர்வு கிடைக்காமல் போக, வங்கியில் திருட்டு வேலையில் ஈடுபட்டு ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார். ஒரு கட்டத்தில் தான் செய்யும் குற்றத்தை உணரும் துல்கர், அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே மீதிக் கதை. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது முதல் மாபெரும் வரவேபை பெற்று, வசூலும் அதிகரித்து வருகிறது.

தமிழில் அமரன், பிரதர், பிளடி பெக்கர் என மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையிலும் லக்கி பாஸ்கர் பாசிடிவ் விமர்சனம் காரணமாக காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் வெறும் 75 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், படத்தின் வெற்றி காரணமாக ஒரு வாரத்தில் 534 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த வார இறுதியில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள நடிகரான துல்கர் சல்மான், தெலுங்கு மொழியில் ’மகாநதி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து ’சீதா ராமம்’ படத்தில் நடித்தார். இப்படம் காதல் காவியமாக இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது லக்கி பாஸ்கர் மூலம் துல்கர் சல்மான் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.