ETV Bharat / entertainment

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் வெங்கட் பிரபு! - Venkat Prabhu explained Insta story

Venkat Prabhu: இயக்குநர் வெங்கட் பிரபு தான் போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Venkat Prabhu
Venkat Prabhu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 11:02 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு கோட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக்குமார் கூலி டைட்டில் டீசரை கலாய்த்துப் போட்ட வீடியோவை ஆதரித்து, ஸ்மைலி போட்டு ஸ்டோரி போட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், சமூக வலைத்தளங்களில் கார்த்திக்குமார் கலாய்த்ததை இயக்குநர் வெங்கட் பிரபு ஆதரித்துள்ளார் எனப் பேசினர். இதைக் கவனித்த வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "இல்லவே இல்லை. இது எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்தும் கருத்து தான். கமர்சியல் படங்களை ஒரே பாணியில் எடுப்பதைத் தான் கார்த்திக்குமார் கலாய்த்து இருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா?” என்கிற கேள்வியையும் வெங்கட் பிரபு எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் இது தான் வாய்ப்பு என கோட் திரைப்படம் வழக்கமான படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “வெங்கட் பிரபு செப்.5ஆம் தேதி அதற்கான பதில் தெரிந்துவிடும்" என்றார்.

இதையும் படிங்க: அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.. குட் பேட் அக்லி படத்தின் சுவாரஸ்ய அப்டேட்! - GOOD BAD UGLY Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.