ETV Bharat / entertainment

எஞ்சாயி என்ஜாமி பாடலால் அறிவு பல பிரச்னைகளைச் சந்தித்தார்.. மனம் திறந்த பா.ரஞ்சித்! - enjoy enjaami song - ENJOY ENJAAMI SONG

Enjoy enjaami song: எஞ்சாயி என்ஜாமி பாடல் பெரிய அரசியலை குழந்தைகள் வரை கொண்டு சேர்த்தது எனவும், அப்பாடல் மூலம் அறிவு பல பிரச்னைகளைs சந்தித்தார் என இயக்குnaர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

வள்ளியம்மா பேராண்டி இசை ஆல்பம் வெளியீட்டு விழா
வள்ளியம்மா பேராண்டி இசை ஆல்பம் வெளியீட்டு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 9:04 PM IST

சென்னை: தனி இசைக்கலைஞர் அறிவுவின் 'வள்ளியம்மா பேராண்டி' முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.‌ரஞ்சித், அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. நிறைய புதிய திறமைகளை இமான் ஊக்குவித்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். அதைத் தொடர்ந்து செய்யுங்கள். அறிவு, முதலில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை தான் பாடினார்.

கலை இலக்கியத்தை அரசியல்படுத்த வேண்டும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. அப்படித்தான் சினிமாவுக்கு வந்தோம். நாம் பாடுபட்ட கலை, அரசியல் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது யோசனை. அந்த யோசனைக்குள் இருப்பவர்களுடன் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்து வருகிறோம். அறிவு, மொழி ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. முதன் முதலில் என் முன் பாடிய அறிவு இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்து மாற்றத்தை பார்த்து வருகிறேன்.‌

காலா படத்திலும் அறிவு எழுதிய பாடல் நன்றாக இருந்தது. அறிவின் வரிகளில் அரசியல் தன்மை இருந்தது. அறிவு நான் பார்ப்பதற்கு முன்பே அம்பேத்கரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அது எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகரித்தது. அதேநேரம் அரசியல் தன்மையை, கருத்தை எப்படி எளிய முறையில் கொண்டு வந்து ரசிகர்களிடம் சேர்ப்பது, கதை மற்றும் அரசியல் தன்மை எப்படி எடுத்துக் கொள்வார்கள், சந்தைப்படுத்துதல் எப்படி என்று பல விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

சந்தையாளர்கள், இந்த மாதிரி அரசியல் தன்மை கொண்ட தலித்துகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தன்மை கொண்ட படங்களுக்கு எப்படி ஆதரவு தருவார்கள் என்ற கேள்விக்குறியாக இருந்த காலகட்டத்தில், இவை எல்லாம் வந்ததாகவும், உலக அளவில் ராப் பிரபலமாகி இருந்ததால் அறிவு பாடும் பாடல்கள் மூலம் அரசியல் தன்மை மக்களிடம் போய் சேர்கிறது.‌ இதை முக்கியமாக பார்க்கிறேன்.

இங்கு தனித்துவமான நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். வடசென்னை, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படத்திலும் அறிவு எழுதிய பாடல்கள் மக்களிடம் நன்றாக போய் சேர்ந்திருக்கிறது. அதிலும் எஞ்சாயி என்ஜாமி பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. பெரிய அரசியலை குழந்தைகள் வரை கொண்டு சேர்த்தது.‌ அது மட்டுமல்லாமல் என்ஜாயி பாடல் மூலம் அவர் பல பிரச்னைகளை சந்தித்தார், மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். அதற்கு பதிலடி தான் இந்த 'வள்ளியம்மா பேராண்டி' ஆல்பம்.

சமூகத்தில் நிறைய பிரச்னை நடக்கிறது. அதற்கு பதில் சொல்வதற்காக நாம் மாறிவிடுகிறோம். இந்தியாவின் வரலாறு என்பதே பௌத்தத்துக்கும், பார்ப்பனத்துக்குமான போர். அறிவு நிறைய கற்றுக் கொள்வான் என்று நினைக்கிறேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தான் ஒரு கலைஞனை பக்குவப்படுத்தும், எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ள தேவையில்லை" என்று பேசினார்.

இதையும் படிங்க: "சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை".. தங்கலான் ட்ரெய்லர் வெளியானது! - THANGALAAN TRAILER

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.