சென்னை: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சக மாணவர்களின் சாதிவெறி தாக்குதலுக்கு ஆளானார் மாணவர் சின்னத்துரை.
12ஆம் வகுப்பு படித்துவந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்த நிலையிலும்,பொதுத் தேர்வு எழுத தயாராகி வந்தார். தானாக தேர்வு எழுத முடியாத நிலையில், ஸ்கிரைபர் எனப்படும் உதவியாளர் மூலம் தேர்வெழுதிய சின்னத்துரை, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600 -க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்.
இதையடுத்து சின்னத்துரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அவரைத் தொடர்ந்து பலரும் தேர்வில் சாதித்த மாணவர் சின்னத்துரையை பாராட்டினர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சின்னத்துரையை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு கல்லூரி கல்விக் கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் அதனை செய்ய, தனது தயாரிப்பு நிறுவனமான 'நீலம் பண்பாட்டு மையம்' தயாராக இருப்பதாக ப.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: "படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது" - பிளஸ் 2 தேர்வில் அசத்திய நாங்குநேரி சின்னத்துரை! - Nanguneri Student Chinnadurai