சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரிசெல்வராஜ், "இந்த படம் திரைக்கு வருமா? வராதா? என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால், இந்த கதையை படமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்த படம் வாழை. சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கதை நன்றாக இருந்தால் கொண்டாடப்படும் என்பதற்கு உதாரணமாக வாழை அமைந்துள்ளது. வாழையை தன் சொந்தக் கதையாக மாற்றிக் கொண்ட அனைவருக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி.
பரியேறும் பெருமாள் படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் கழித்து இயக்குநர் பாலா போன் செய்தார். அலுவலகத்திற்கு வர முடியுமா என கேட்டார். நானும் சென்றேன். பேசிக்கொண்டே இருந்தார். திடீரென 5 பவுன் செயினை எடுத்து போட்டு விட்டார். அந்த அறையில் யாருமே கிடையாது. நானும் அவர் மட்டும்தான் இருந்தோம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கு செய்ய வேண்டும் என தோன்றியதோ அதைச் செய்தேன் என்று கூறினார்.
Kamala Cinemas #Vaazhai Celebration!! ✨
— Navvi Studios (@navvistudios) August 24, 2024
Book your tickets Now!! #VaazhaiRunningSuccesfully 🎉✨@mari_selvaraj @Music_Santhosh @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar @KalaiActor #Yugabharathi… pic.twitter.com/iqgiAow4VD
அதன்பிறகு எங்காவது பார்த்தால் மட்டும் பேசிக்கொள்வதுண்டு. அதேபோல தான் வாழை படம் பார்த்துவிட்டு அந்த முத்தம், அரவணைப்பு எல்லாமே இயல்பாக நடந்தது. அந்த முத்தத்திற்கும், மௌனத்திற்கும் இடையே நிறைய வார்த்தைகள் உள்ளது என தெரிவித்தார்.
பஞ்சுமிட்டாய் பாடல் தொடர்பான கேள்விக்கு, அந்த பாடலுக்கு தான் டான்ஸ் ஆடினேன். அந்த பாடல் எனக்கு மிகவும் நெருக்கமான பாடல். மற்றவர்களுக்கு கேட்கும் பொழுது வெறும் பாடலாக தெரிகிறது. ஆனால், என் வாழ்க்கையில் அந்த பாடல் பிணைந்துள்ளது. பஞ்சுமிட்டாய் பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடல்.
அதேபோல அந்த பாடலுக்கான உரிமம் யாரிடம் இருக்கிறது என்பதை விசாரித்து, அந்த உரிமத்தைப் பெற்றுதான் அந்த பாடலை படத்தில் பயன்படுத்தி உள்ளோம். மற்ற படங்கள் பார்த்துவிட்டு பேசுவது போல் இந்த படத்தைப் பற்றி யாரும் பேசவில்லை, அமைதி முத்தங்கள், அரவணைப்பு இது மட்டும் தான் இருந்தது.
Thx sir ! Love u ! #Vaazhai is gonna be your best ! Waiting for your magic again 😘 https://t.co/ibllOpjQ3n
— Udhay (@Udhaystalin) July 21, 2023
அமைச்சர் உதயநிதி பாராட்டினாரா? என்ற கேள்விக்கு, மாமன்னன் வெளியாவதற்கு முன்பே மாரியின் சிறந்த படம் வாழை என உதயநிதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. முதன் முதலில் ட்வீட் போட்டவர் உதயநிதி தான்.
அதேபோல் வாழை படப்பிடிப்பு தளத்திற்கும் வந்தார். படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவரும் அவர்தான். எனக்கும் கலகலப்பாக படம் எடுக்க ஆசை தான். ஆனால், கலகலப்பான படங்களை எடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இது போன்ற படங்களை எடுப்பதற்கு ஒரு சில இயக்குநர்கள் தான் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : மலையாள சினிமாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் ராஜினாமா! - Ranjith resigns KCCA chairman Post