ETV Bharat / entertainment

ராயன் படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது! - Raayan Water Packet song - RAAYAN WATER PACKET SONG

Raayan Water Packet song: தனுஷ் இயக்கி நடித்து வரும் அவரது 50வது படமான ராயன் படத்தில் இருந்து வாட்டர் பாக்கெட் என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

வாட்டர் பாக்கெட் பாடல்
வாட்டர் பாக்கெட் பாடல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 8:03 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர். இவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது தெலுங்கில் குபேரா, இசை அமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படம் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில், தற்போது ராயன் என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். முன்னதாக ராஜ்கிரண், ரேவதி நடித்த ப.பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திலும் தனுஷ் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் 'ராயன்' படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

இவ்வாறு தனுஷ் எழுதியுள்ள ‘அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாட்டர் பாக்கெட் என தொடங்கும் பாடல் சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி சம்பந்தமான பாடலாக உருவாகியுள்ளது. இந்தப் பாடலை கானா காதர் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். ரொமாண்டிக் பாடலான இது மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா, சோஜாவா படுத்துக்குவ உன் மடியில சாஞ்சி, சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி என கலக்கலான வரிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராயன் படம் அடுத்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள இரண்டாவது படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளையராஜாவை வம்புக்கு இழுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ! - RR Team Kanmani Anbodu Kadhalan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.