சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர். ப.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்தார். இந்த நிலையில், தற்போது அவரது 50வது படமான ராயன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மேலும், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில், இன்று படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே, படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#Raayan [#ABRatings - 3.75/5]
— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024
- Eventhough it's an normal Revenge story Director #Dhanush has exceeded with his writing & execution👌
- Interval Block, Many scenes in second half, Climax song are peak theatrical moment 🔥
- ARRahman Music is Another soul of the film🎶
- Sundeep,… pic.twitter.com/pNjmL4uTsm
அதன்படி, அமுத பாரதி என்பவர், “இது சாதாரண பழிவாங்கும் கதைதான். அதனை தனுஷ் நன்றாக எழுதி இயக்கியுள்ளார். இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் சில காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ், பாடல் திரையரங்குகளில் நிச்சயம் அதிரும். ஏ.ஆர்.ரகுமான் இசை படத்திற்கு மற்றுமொரு ப்ளஸ்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தீப், துஷாரா உள்ளிட்டோரின் நடிப்பு, கேமரா ஒர்க் தனுஷின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக திரையரங்குகளில் பார்க்கக்கூடிய படமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
#RaayanReview : Spellbinding!
— Sreedhar Pillai (@sri50) July 26, 2024
As a director @dhanushkraja has come out with a raw, intense, emotional and deadly film which keeps you on the edge of the seat till the last frame!
The music of @arrahman his best in recent times (climax BGM awesome) and the ensemble star cast of… pic.twitter.com/O6XiZFAY3V
தனுஷ் ஒரு இயக்குனராக அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார் என்று ஸ்ரீதர் பிள்ளை பதிவிட்டுள்ளார். கேமராமேன் ஓம் பிரகாஷின் கேமரா ஒர்க், ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக இருப்பதாகவும், தனுஷ் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும், அனைவரது நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், வன்முறை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
#Raayan - Top Notch Casting & Perf. Interval Block, SJS-Dhanush 1st Faceoff Mass. Superb Cinematography, ARR Music, Stunts Gud. Slow & Steady 1st Hlf, 2nd Hlf lacks Story progress & Emotions. Main Plot Twist is not convincing enough. A WATCHABLE Action Flick!
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 26, 2024
கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர், கதாபாத்திர தேர்வு மற்றும் நடிப்பு டாப் நாட்ச் ஆக உள்ளது என்றும், இடைவேளை காட்சி மற்றும் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக பார்க்கும் காட்சி மாஸாக இருப்பதாக கூறியுள்ள அவர், மெதுவான மற்றும் ஸ்டெடியான முதல் பாதி லேக்கான இரண்டாம் பாதி திருப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றாலும் பார்க்கக்கூடிய படம் என்று பதிவிட்டுள்ளார்.
#Raayan [4/5] : Starts as a simple story.. A twist in the middle, makes the story complicated.. @dhanushkraja has neatly executed this action emotional thriller.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) July 26, 2024
Fantastic acting too..
Unpredictable twists and turns make it a Winner! 👍
ரமேஷ் பாலா, சாதாரண கதையாக தொடங்கி சிக்கலான கதையாக நிறைவு பெறுகிறது. தனுஷ் இந்த ஆக்சன் எமோஷனல் படத்தை நீட்டாக வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பான சண்டை இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கலவையான விமர்சனங்களை ராயன் படம் பெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'ராயன்' பட ரிலீஸ்.. சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ்! - dhanush in rohini theatres