சென்னை: ஒரு படத்தில் முக்கியமான அங்கம், சண்டைக் காட்சிகள். அந்த சண்டைக் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது பின்னணிக் குரலாகும். பல நட்சத்திர நடிகர்களின் படத்தில் இருக்கும் சண்டை காட்சிகளுக்கு குரல் கொடுத்தவர் தேவன் குமார். இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறயுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரீட்சமான நண்பர். அவரது பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்துள்ளார்.
திரைக்கு முன்: அவர் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிய நாயகி என்னும் மெகா தொடர் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தபட்டார், அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தன் நடிப்பு பயணத்தை, இதற்கு பின்தான் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 41 வயதில் நோயில் சிக்கிய ஃபகத் ஃபாசில்.. வெளியான அதிர்ச்சி தகவல்!