சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய தலைவர்" என்ற தலைப்பில் எம்.டி.சினிமாஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பாரதிராஜா, ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரவிந்த்ராஜ் இயக்கும் இப்படத்தில் முத்துராமலிங்கத் தேவர் கதாபாத்திரத்தில் பஷீர் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் கதாநாயகன் பஷீர் தனது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தேசிய தலைவர் படம் முழுமையாக முடிந்துவிட்டது. வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெறும். இளையராஜா இப்படத்தில் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடித்ததில் பெருமையும், கௌரவமும் கிடைத்துள்ளது என்றார்.
முத்துராமலிங்கத் தேவர் சாதிய தலைவர் அல்ல” என்றார். இதனைத்தொடர்ந்து சீமான், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது சிலர் தடுக்கின்றனரே என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, "அங்கிருந்தவர்கள் சீமான் எங்கள் சமூகத்திற்கு எதிராக பேசினார். அது அரசியல் அதுகுறித்து தனியாக பேசுவோம்” என்றனர்.
தொடர்ந்து சீமான் பற்றிய கேள்வியால் படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. படத்தை பற்றி மட்டும் கேளுங்கள் சீமான் பற்றி கேட்க வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நடந்து கொண்ட விஜய் சேதுபதி... போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர்!
அதனை தொடர்ந்து மீண்டும் பேசிய பஷீர், "இப்படத்தை வெளியிட 100 சதவீதம் அரசியல் சிக்கல் இல்லை. பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் தேவர் ஜெயந்திக்கு படத்தை வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவோம். அனைத்து விருது போட்டிகளுக்கும் அனுப்ப உள்ளோம். படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்" என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்