ஹைதராபாத்: இந்தியாவில் வண்ணமயமான ஹோலி பண்டிகை இன்று (மார்ச்.25) கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பனிக்காலம் காலம் முடிந்து வெயில் காலம் வருவதை வசந்த காலம் என்று கூறப்படும். அப்போது கால மாற்றம் காரணமாகப் பொதுமக்களுக்குப் பல நோய்கள் ஏற்படும். இதை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஹோலி பண்டிகையின் முதல் நாள் இரவு அக்னி தேவனுக்கு பூஜை செய்யும் விதமாக வீட்டு வாசலில் மரக்கட்டைகளை வைத்து எரித்து பூஜை செய்கின்றனர். இந்த நிகழ்வுக்கு ஹோலிகா தகனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பக்த பிரகலாதன் உயிர்பெற்று எழுந்ததையும் ஹோலி பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹோலி பண்டிகையில் கலர் பொடிகளைத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது தூவி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தென் இந்தியாவில் சென்னையில் சில இடங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், திரை நட்சத்திரங்கள் தங்கள் வீடுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது படப்பிடிப்பு தளத்தில் டைகர் ஷெராஃப், திஷா படானி ஆகியோருடன் ஹோலி பண்டிகை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் நடிகர்கள் விஜய் தேவர்கொண்டா, மிருனால் தாகூர் ஆகியோர் ஃபேமிலி ஸ்டார் திரைப்பட ப்ரமோஷனில் ஹோலி கொண்டாடியது வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதேபோல் நடிகைகள் கியாரா அதிவானி, ரகுல் ப்ரித் சிங், சமந்தா ஆகியோர் தனது வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறதா விஜயின் கோட் திரைப்படம்? - ரசிகர்கள் உற்சாகம்! - GOAT MOVIE Update