சென்னை: நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'நெவர் எஸ்கேப்' என்ற ஹாரர் த்ரில்லர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராபர்ட் மாஸ்டர், "இந்த படத்தின் கதையை இயக்குநர் வந்து சொன்ன போது நான் மொட்டை அடிக்க வேண்டும் என்றார். நான் அப்போது வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டு இப்படத்தில் மொட்டை அடித்து நடித்தேன். சின்ன படம், பெரிய படம் என்பதை நான் எப்போதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது கொஞ்சம் பிஸியாக இருந்தேன். கேப் கிடைத்ததால் கடந்த சீசனில் கலந்து கொண்டேன். உண்மையா பொய்யா என்று பார்க்கத்தான் உள்ளே சென்றேன். பிக்பாஸ் அனுபவம் நன்றாக இருந்தது.
லியோ படத்தில் நடன கலைஞர்களுக்கு சம்பளம் தராதது பற்றிய கேள்விக்கு, இரண்டாயிரம் பேர் என்பது எங்க யூனியனிலேயே கிடையாது. உறுப்பினர் அல்லாதோர் யார் மூலமாக வந்தார்களோ அவரிடம் இருந்து நடன கலைஞர்களுக்கு சம்பளம் செல்லவில்லை. அது எங்களுடைய யூனியன் பேரை கெடுத்து விட்டது. இது சின்ன படம் என்பதால் இருபது பேரை வைத்து எடுத்தோம். இப்படத்தில் நடிப்பதற்கு சத்யராஜின் சாயலை கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டேன்.
சிம்பு பற்றிய கேள்விக்கு சிம்புவும் நானும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் சினிமாவில் நடனம் ஆடக் கூடிய நடிகர்களை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளனர். பிக்பாஸ் பற்றிய கேள்விக்கு, என்னை கேட்டால் பிக்பாஸ் இந்த சமூகத்திற்கு தேவையில்லாதது. நான் உள்ளே போனது பணம் சம்பாதிக்கத்தான், எனக்கு பேர் இருக்கிறது. கமல்ஹாசன் போனதும் பணம் சம்பாதிக்கத் தான் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்று உங்களுக்கே தெரியும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒருவழியாக பிரேமலு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! - Premalu Ott Release