ETV Bharat / entertainment

ஏரியை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பினாரா நாகர்ஜூனா? இழப்பீடு கோர முடிவு! - NAGARJUNA BUILDING DEMOLISHED

NAGARJUNA BUILDING DEMOLISHED: ஹைதராபாத் மாநகரில் உள்ள நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான N-convention Centre என்ற கட்டடத்தை ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி தெலங்கானா அரசு இடித்துள்ளது.

நாகார்ஜுனா புகைப்படம்
நாகார்ஜுனா (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 4:09 PM IST

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்குs சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட கட்டடத்தை தெலங்கானா அரசு இடித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மாதாபூர் என்ற பகுதியில் நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமாக உள்ள N-convention Centre என்ற கட்டடம் தும்மிடிகுண்டா என்ற ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு (HYDRA) என்ற மாநில அரசுத்துறை அந்த கட்டடத்தை இடித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "N-convention Centre முழுவதும் எனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செயல் அரங்கேறியுள்ளது.

இது முழுவதும் பட்டா இடம், ஏரிக்குச் சொந்தமான ஒரு அங்குல இடத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை. நாங்கள் எந்தவித சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடவில்லை. தவறான தகவலின் பேரில் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தீர்ப்பில் நான் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன்.

நாங்கள் பொதுச் சொத்துக்களை எந்த வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்பதற்காக இதனை பதிவிடுகிறேன். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தக்க இழப்பீடு கோருவேன்" என கூறியுள்ளார். முன்னதாக N-convention Centre என்ற கட்டடத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மகள் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த HYDRA என்ற ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் தொடங்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோட் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம்?.. வெங்கட் பிரபு ஸ்டைலில் 3 நிமிட BTS காட்சிகள்! - GOAT movie duration

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.