ETV Bharat / entertainment

"எனக்கு உடல் நலக்குறைவா?" ஒரே போட்டோவில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்! - Amitabh bachchan illness was fake - AMITABH BACHCHAN ILLNESS WAS FAKE

Amitabh Bachchan: உடல் நிலை சரியில்லாதது குறித்து வெளியான செய்திகளுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 12:50 PM IST

Updated : Mar 23, 2024, 2:12 PM IST

ஐதராபாத் : பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. முதலில் அவருக்கு இருதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காலில் ஏற்பட்ட ரத்த உறைதல் காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி காட்டுத் தீயாக பரவியது. அவரது உடல் நலன் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறி வெளியான செய்தியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முற்றிலும் மறுத்து உள்ளார். குறிப்பாக அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான சில மணி நேரத்தில், மும்பை தானே மைதானத்தில் நடைபெற்று முதலாவது ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.

தனது மகன் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருடன் அமிதாப் பச்சன் ஒன்றாக அமர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்பதை நிரூபணம் செய்வது போல் ரசிர்களை நோக்கி கைகளை அசைத்து ஆரவாரப்படுத்திய அமிதாப் பச்சனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதேநேரம், முதலாவது ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடரில் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனின் மும்பை அணி தோல்வியை தழுவி கோப்பையை கோட்டை விட்டது. தானே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் டைகர்ஸ் ஆப் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.

அண்மையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் விழாவிலும் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 81 வயதான அமிதாப் பச்சன் பாலிவுட்டில் தொடர்ந்து வரிசை கட்டி நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் மெகா பட்ஜெட் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தெலுங்கு நடிகர் பிரபாசின் கல்கி 2898 AD படத்தில் அமிதாப் பச்சன் நடித்து உள்ளார். இந்த படம் வரும் மே 9ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன் நடத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

Last Updated : Mar 23, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.