ETV Bharat / entertainment

ரன்வீர் - தீபிகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை! - Deepika Padukone Baby Girl - DEEPIKA PADUKONE BABY GIRL

பாலிவுட் தம்பதி ரன்வீர் சிங் - தீபிகா படுகோனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

Etv Bharat
Ranveer Singh - Deepika padukone (ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 1:42 PM IST

ஐதராபாத்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நேற்று நடிகை தீபிகா படுகோன், மும்பை கிரிகோன் பகுதியில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாய் தீபிகா படுகோனும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன்பாக ரன்வீர் சிங், தீபிகா படுகோ உள்ளிட்ட குடும்பத்தினர் மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில், கூட்டத்தினருடன் ரன்வீர் மற்றும் தீபிகா பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டி சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக் கொண்டனர்.

சரியான நேரத்தில் மிகச் சரியான முறையில் தீபிகா படுகோனுக்கு பிரசவம் இனிதே நடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தான் கருவுற்று இருப்பதாக நடிகை தீபிகா படுகோனும் விரைவில் தங்கள் வீட்டில் மூன்றாவது நபர் வர உள்ளதாக நடிகர் ரன்பீர் கபூரும் அறிவித்து இருந்தனர்.

இதையும் படிங்க: ’அத்தான் அத்தான்’.. கார்த்தி நடிப்பில் மெய்யழகன் டீசர் வெளியானது! - Meiyazhagan teaser out now

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.