ETV Bharat / entertainment

தவறுதலாக துப்பாக்கி சுட்டதில் படுகாயம்... நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி! - Actor Govinda in hospital - ACTOR GOVINDA IN HOSPITAL

Actor Govinda: பாலிவுட் நடிகர் கோவிந்தா கால் பகுதியில் தவறுதலாக துப்பாக்கி குண்டு சுட்டதில் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கோவிந்தா
நடிகர் கோவிந்தா (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 10:23 AM IST

Updated : Oct 1, 2024, 10:34 AM IST

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி உறுப்பினருமான கோவிந்தா மும்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, கோவிந்தா இன்று காலை கொல்கத்தாவிற்கு வேலை நிமித்தமாக கிளம்பிய போது தன்னிடம் உள்ள லைசென்ஸ் துப்பாக்கியை பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது தவறுதலாக நடிகர் கோவிந்தாவின் கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக சிகிச்சை பெற அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - ஆளுநர் வேண்டுதல்.. முதலமைச்சர் வாழ்த்து! - Rajinikanth Hospitalized

நடிகர் கோவிந்தா உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சாஷி சின்ஹா கூறுகையில், மருத்துவர் கோவிந்தாவின் கால் பகுதியில் இருந்து துப்பாகி குண்டை எடுத்துவிட்டனர். கோவிந்தா தற்போது மருத்துவமனையில் நலமாக உள்ளார் என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 1, 2024, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.