ETV Bharat / entertainment

கோவை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்! - Blue star movie

Blue star Movie: கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர், இப்படம் திரையரங்கிற்காகவே எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

கோவை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:20 PM IST

Updated : Feb 6, 2024, 7:29 PM IST

கோவை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்

கோயம்புத்தூர்: லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து, இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு நடித்து ஜன.25ஆம் தேதி வெளியான படம் 'ப்ளூ ஸ்டார்'. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து, ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இரண்டாவது வாரமாக ப்ளூ ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள திரையரங்கில், நேற்று (பிப்.2) மாலை ப்ளூ ஸ்டார் திரைப்படக் குழுவினர்களான நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி பாண்டியராஜன், நடிகை கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் வருகை புரிந்து, படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அசோக் செல்வன், “இரண்டாவது வாரமாக ப்ளூ ஸ்டார் படத்தைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 200 திரையரங்குகளுக்கும் மேல் இந்த படம் வெற்றிகரமாக ஓடி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமல்லாமல், மற்ற திரையரங்குகளிலும் ப்ளூ ஸ்டார் படம் ஓடுவது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது.

குறிப்பாக, எனது படம் வெளியாகும் போதெல்லாம் நிச்சயமாக கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கில் வந்து படம் பார்ப்பேன். ப்ளூ ஸ்டார் படத்திற்கும் கோயம்புத்தூர் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். ப்ளூ ஸ்டார், திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். கரோனாவிற்குப் பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதாக நினைத்த நிலையில், தற்போது மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எனது மற்ற படங்களில் இல்லாத புதிய ரசிகர்களைப் பெற்றுள்ளேன். மக்களோடு இணைந்துள்ளேன்” எனவும் கூறினார். பின்னர் பேசிய நடிகர் சாந்தனு, “ப்ளூ ஸ்டார் படத்திற்கு கோயம்புத்தூர் மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பதை வலியுறுத்தும்.

இந்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியது போல, நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும். அதனைத் தாண்டி நாம் செய்ய வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக்கூடிய விஷயங்களாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: வடக்குப்பட்டி ராமசாமி; ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்!

Last Updated : Feb 6, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.