சென்னை: அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள் திரைப்படம் 'பிளாக்' (BLACK) . இதில் விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை மாநகரம், டாணாக்காரன், இறுக்கப்பற்று போன்ற படங்களைத் தயாரித்த 'பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்' தயாரித்துள்ளது.
இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் ஜீவா, இயக்குநர் கே.ஜி பாலசுப்பிரமணி உள்ளிட்ட பிளாக் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
Here is the #BLACK official trailer. Get ready to unravel the mystery! @JiivaOfficial @priya_Bshankar @kgBalasubramani @actorvivekpra #ShivaShahra @iamswayamsiddha @gokulbenoy @SamCSmusic @madhankarky @ArtSathees @philoedit #MetroMagesh #SherifMaster @rthanga @prabhu_sr… pic.twitter.com/6NNvAgJSnk
— Potential Studios LLP (@Potential_st) September 30, 2024
அப்போது நடிகர் ஜீவா பேசுகையில்,"இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனே பிடித்தது. காரணம் பல நடிகர்களிடம் இந்த கதை சென்று திருத்தப்பட்ட ஒன்றாக வந்தது. அதனாலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஆங்கில படத்தின் ரீமேக் ஆனால் அதை நான் பார்க்கவில்லை.
இதையும் படிங்க: 'சூர்யா-44' படப்பிடிப்பு நிறைவு - ரிலீஸ் தேதி எப்போது?
இயக்குநர் என்ன கதை கூறினாரோ அதை அப்படியே நடித்துள்ளேன். என்னுடைய 21 வருட திரை பயணத்தில் முக்கியமான படமாக 'பிளாக்' அமைந்துள்ளது. நான் திரைக்கு வந்த முதல் 10 வருடத்தில் பல புதிய முயற்சிகளை எடுத்தேன். அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தில் அப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளேன்.
நிச்சயம் இந்த திரைப்படம் வித்தியாசமான அதேநேரம் சுவாரசியமான படமாக இருக்கும். படம் புரியவே மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என தோன்றும். இந்த படத்தில் நான் மட்டும் தான் உங்களுக்கு பொழுதுபோக்கு அதற்கு காரணம் படம் முழுக்க சீரியஸ் ஆக செல்லும். நான் தனியாக இருப்பேன்.
— Jiiva (@JiivaOfficial) October 5, 2024
என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த படம் உதவியாக இருந்தது. இந்த கூட்டணியுடன் பல படங்கள் பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறேன். படத்தின் டப்பிங் பணியின் போது நண்பர்கள் சில காட்சிகளைப் பார்த்து படத்தில் எதோ ஒன்று உள்ளது எனக் கூறினர். என்னுடைய திரை பயணத்தில் இந்த பிளாக் திரைப்படம் முக்கிய படமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்