ETV Bharat / entertainment

15 ஆண்டுகளாக 6 ஆயிரம் கிளிகளுக்கு உணவளிக்கும் ’Birdman’ சுதர்சன்... பறவைகளின் தந்தையாக வாழும் ரியல் மெய்யழகன்!

‘Birdman' சுதர்சன் தான் கிளிகளுக்கு உணவு அளிப்பதற்காக காரணம் குறித்தும், மெய்யழகன் திரைப்பட காட்சிகள் தனது வீட்டில் படமாக்கப்பட்டது குறித்தும் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அரவிந்த் சாமி, சுதர்சன் புகைப்படம்
நடிகர் அரவிந்த் சாமி, சுதர்சன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 4:31 PM IST

சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மெய்யழகன்'. உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமி வீட்டின் மேல் நூற்றுக்கணக்கான கிளிகளுடன் பேசிக்கொண்டு நேரத்தை செலவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அற்புதமான காட்சி சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. சுதர்சனின் வீட்டிற்கு 1000க்கும் மேற்பட்ட கிளிகள் அடிக்கடி வந்து செல்கின்றன.

இதுகுறித்து சுதர்சன் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "எனது வீட்டிற்கு தினமும் காலை, மாலை என 6000 கிளிகள் வரும். 15 ஆண்டுகளாக உணவருந்த இந்த கிளிகள் வருகின்றன.‌ 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது அப்பா இறந்த போது தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டிருந்த போது ஒரு அம்மா பறவைக்கு உணவு வைப்பதை பார்த்தேன்.

பறவைகளுக்கு உணவளிக்கும் சுதர்சன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது தினமும் நாம் ஏன் பறவைகளுக்கு உணவு வைக்கக்கூடாது என்று தோன்றியது. அதில் இருந்து தற்போது வரை கிளிகள் மட்டுமின்றி பல்வேறு வகையான பறவைகளுக்கு உணவு வைத்து வருகிறேன். காலை 4 மணிக்கு எழுந்து கிளிகளுக்கு உணவு தயார் செய்வேன். சரியாக 6 மணி முதல் கிளிகள் உண்பதற்காக வரும். அதேபோல் மதியம் 2 மணிக்கு உணவு தயார் செய்வேன். கிளிகள் 4 மணிக்கு மேல் வந்து உணவு அருந்தி செல்லும். 50 பூனைகள், 150 ஆடுகளுக்கு மேல் காலை 10 மணிக்கு வந்து உணவு அருந்தி செல்லும்.

அதுமட்டுமின்றி சிட்டுக்குருவி, கழுகு, மைனாக்கள் ஆகியவை வரும். ஒரு முறை குரங்கு வந்தது. அதற்கு நான் இங்கு ப்றவைக்கு உணவு அளித்ததை அறிந்து மரங்கொத்தி பறவையுடன் வந்தது. அது பசியுடன் இருந்த மரங்கொத்திக்கு உணவளித்த விதம் என்னை பூரிப்படைய செய்தது. மேலும் மழை காலங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வரும். ஏனென்றால் புயலால் மரத்தில் இருந்து பழங்கள் கீழே விழுந்துவிடும். அதனால் இங்கு உணவு இருப்பதை அறிந்து இங்கே வந்துவிடுகின்றன" என கூறினார்.

நடிகர் அரவிந்த் சாமியுடன் சுதர்சன் (Credits - Sudarsonsah Sah Instagram Account)

மெய்யழகன் படத்தின் காட்சிகள் வீட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்து கேட்ட போது, “மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமி தனது வீட்டில் கிளிகளுக்கு உணவிடுவது போன்று இடம் பெற்றுள்ள காட்சியை எனது வீட்டில் தான் எடுத்தார்கள். சூர்யாவின் 2டி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி இங்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.‌ சூர்யாவுக்கு எனது வீடு மிகவும் பிடித்துப் போக, எனக்கு பரிசு கொடுத்தார். அதன்பிறகு இங்கு தான் படம் எடுப்பதாக சொன்னார்கள். அரவிந்த் சாமி, கார்த்தி, இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் அவர்களது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர்” என்றார்

நடிகர் கார்த்தியுடன் சுதர்சன்
நடிகர் கார்த்தியுடன் சுதர்சன் (Credits - Sudarsonsah Sah Instagram Account)

மெய்யழகன் படப்பிடிப்பு குறித்து கேட்டதற்கு, “மெய்யழகன் படப்பிடிப்பின் போது அனைவரும் கிளிகளை தங்களது செல்ஃபோனில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அதனால் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சியை எடுத்தனர். கடும் வெயிலில் அரவிந்த் சாமியை பல மணி நேரம் நிற்க வைத்து படப்பிடிப்பு நடத்தினர். அப்போது வீட்டின் முன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர்.

இதையும் படிங்க: "விக்னேஷ் சிவன் தான் என் இதயம் தேடிய நபர்" - நயன்தாரா ஆவணப்படம் டிரெய்லர் வெளியீடு!

தற்போது கிளிகளை படம் பிடிக்க அதிக மக்கள் வருகின்றனர். அதனால் பார்ப்பதற்கு அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதிக்கிறேன். மேலும் தற்போது நிறைய திரை பிரபலங்களும் பறவைகளை பார்க்க இங்கு வருகின்றனர். மெய்யழகன் படத்திற்காக படக்குழுவினர் பணம் தருவதாக சொன்னார்கள், ஆனால் நான் எதுவும் வாங்கவில்லை. கடவுள் அந்த படத்தை நன்றாக ஓட வைத்துள்ளார். இது எனக்கு புண்ணியம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.