ETV Bharat / entertainment

பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்கில் ஆனந்தியை அதிகாரம் செய்த முத்து... பெஸ்ட், வொர்ஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சண்டை! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8: பிக்பாஸில் நேற்று ஆண்கள், பெண்கள் கலந்து, ஹோட்டல் டாஸ்கில் பெஸ்ட் போட்டியாளர்கள் ஒரு அணியாகவும், வொர்ஸ்ட் போட்டியாளர்கள் ஒரு அணியாகவும் விளையாடிய போது முத்து, ஆனந்தி இடையே சண்டை ஏற்பட்டது

பிக்பாஸ் 8 தமிழ் ஆனந்தி, முத்துக்குமரன்
பிக்பாஸ் 8 தமிழ் ஆனந்தி, முத்துக்குமரன் (Credits - ananthi_rj Instagram Account, MuthuKumaran jegatheesan Instagram account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 11:22 AM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் 18ஆம் நாள் 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுடன் தொடங்கியது. அனைவரும் ஆலு பரோட்டா போட்டு சாப்பிட்டதால் பெண்கள் அணியில் உருளைகிழங்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு சுனிதா 'யார் ஆலு பரோட்டா ஆர்டர் கொடுத்தது' என கேட்டுக் கொண்டு வீடு முழுவதும் சுற்றி வந்தார். காலையிலேயே ஜாக்குலின், சவுந்தர்யாவிடம் பாடி ஷேமிங் பஞ்சாயத்தை தொடங்கினார்.

அப்போது சவுந்தர்யா, 'மறுபடியும் முதல்ல இருந்தா' என்ற மோடில் மனசு புண்பட்டிருந்தால் சாரி என பேச்சை முடித்தார். இதனைத்தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் ஹோட்டல் ஊழியர்கள் எவ்வாறு விருந்தினர்களை கவனித்து கொண்டனர் என ரிவீயு செய்யும்படி பிக்பாஸ் தெரிவித்தார். இதில் முத்துக்குமரன் பெண்கள் அணியினரை பாராட்டுவது போல கலாய்த்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. இதற்கு பிக்பாஸ் 'வஞ்சப்புகழ்ச்சி' நன்றாக இருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் இந்த ஹோட்டல் டாஸ்கில் நன்றாக விளையாடிய முத்துக்குமரன், ரஞ்சித், சுனிதா, தர்ஷா, பவித்ரா ஆகியோர் விருந்தினர் அணியாகவும், சரியாக விளையாடாதவர்கள் நிர்வாக அணியாகவும் பிரிக்கப்பட்டனர். இதில் நிர்வாக சேவையை பார்வையிட ஹோட்டல் முதலாளியின் மகனாக முத்துக்குமரன் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினார். 'மூன்வாக் மூர்த்தி'யாக ரஞ்சித் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது.

'ட்வீட்டி' என்ற குழந்தை கதாபாத்திரத்தில் தர்ஷிகா நடித்தார். 'லவ்' என பெயர் வைத்து கொண்ட தர்ஷா அந்தியன் திரைப்படம் போல மூன்று கதாபாத்திரத்தில் அவ்வப் போது மாறுவாராம். மறுபக்கம் நிர்வாக அணியில் மேனேஜர் பதவியை சவுந்தர்யா ஏற்றார். ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாக தீபக் நிற்க, அவரிடம் பவித்ரா, கஜினி கெட்டப்பில் வந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர் லவ் மோடில் வந்த தர்ஷா குப்தா, சாலட், சாண்ட்விச் என பல ஆர்டர்களை செய்தார்.

அப்போது ஜாக்குலின் அன்ஷிதாவிடம், ‘என்னடி இந்த லவ்வு வந்ததுல இருந்து தின்னுக்கிட்டே இருக்கு’ என கிண்டல் செய்தார். மறுபக்கம் முத்துக்குமரன், புகார் பலகையில் வரிசையாக நிர்வாகத்தின் மீது பல புகார்களை எழுதிக் கொண்டே இருந்தார். இதனைத்தொடர்ந்து தர்ஷாவுக்கு, சத்யா தலை அம்சாஜ் செய்து கொண்டிருந்தார். பின்னர் வாடிக்கையாளர் ஆர்டரக்ளை கவனித்து கொண்டிருந்த ஆனந்தி, கண்ணாடி கதவில் முட்டிக் கொண்டார்.

இதனால் முத்து, ”என்ன அங்க சத்தம், கவனமா வர மாட்டிங்களா” என கடிந்து கொள்ள, ஆனந்தி “நான் இடிச்சிக்கிட்டேன், பணியாளர்கள் பாதுகாப்பு முக்கியமில்லையா” என கேட்டுவிட்டு, கிட்சனுக்கு சென்று கண்கலங்கினார். இந்த விவகாரம் ரிவீயு நேரத்தில் பூதாகரமாக வெடித்தது. அப்போது, ஆனந்தி நான் கதவில் இடுத்துக் கொண்ட போது அதை கண்டுக் கொள்ளாமல் முத்து அதிகார தொனியில் பேசினார்.

மேலும், ஆனந்தி “நீங்கள் இந்த இடத்தை வாங்கி இருக்கலாம், ஆனால் பணியாளர்களை வாங்கவில்லை” என விளாசினார். இந்த குற்றசாட்டுக்கு முத்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பதிலளித்த விதம் பாராட்டை பெற்றது. முத்து, ”நான் ஹோட்டல் முதலாளியின் மகன் கேரக்டராக தான் அப்படி நடந்து கொண்டேன். கவனமா வரக்கூடாதா என்று தான் கேட்டேன். மோசமான முதலாளி பல பேர் இருக்கிறார்கள் அவர்களை போல நடித்தேன்.

இதையும் படிங்க: தன் மகள் நடிக்கும் படத்தில் மீண்டும் இயக்குநராகும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத ஆனந்தி அழுது கோண்டே எழுந்து சென்றார். முத்துக்குமரன் கேரக்டராக நடித்த விதம் முதல் அதற்கு விளக்கம் கொடுக்கும் போது அமைதியாக இருந்த விதம் என அனைத்தும் ரசிக்குபடியாக இருந்தது. நிர்வாக அணியினர் சொதப்பியதால் மேலாளர் சவுந்தர்யா வேலை பறிக்கப்பட்டதுடன் ஹோட்டல் டாஸ்க் முடிந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் பெண்கள் அணியினர் நாமினேஷன் ஃப்ரி பாஸை வென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.