ETV Bharat / entertainment

அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் கலக்கல் ரொமான்ஸ்; இளைஞர்களை துள்ளல் போட வைக்கும் ’ஒன்ஸ் மோர்’ பாடல் வெளியீடு! - ONCE MORE MOVIE FIRST SINGLE

Once More movie first single: விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் முதல் சிங்கிள் 'மிஸ் ஒருத்தி' பாடல் வெளியாகியுள்ளது.

ஒன்ஸ் மோர் திரைப்பட போஸ்டர்
ஒன்ஸ் மோர் திரைப்பட போஸ்டர் (Credits - @iam_arjundas X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 12:15 PM IST

சென்னை: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ (Once More) மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஹிருதயம், குஷி, ஹை நானா ஆகிய வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஒன்ஸ் மோர் படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கமல் கலை இயக்குநராகவும், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவரது இசையமைப்பில் ஒன்ஸ் மோர் படத்தின் முதல் சிங்கிள் 'மிஸ் ஒருத்தி' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே ஒன்ஸ் மோர் படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அர்ஜூன் தாஸ், அதிதி இடையே கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டி வந்தனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்கில் ஆனந்தியை அதிகாரம் செய்த முத்து... பெஸ்ட், வொர்ஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சண்டை!

நடிகை அதிதி ஷங்கர் இந்த திரைப்படம் மட்டுமின்றி பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒன்ஸ் மோர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்திற்கு திரைக்கு வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.