ETV Bharat / entertainment

"ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்" - அப்போலோ மருத்துவமனை அறிக்கை! - rajinikanth health condition - RAJINIKANTH HEALTH CONDITION

Rajinikanth health condition: ரஜினிகாந்திற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவர் 2 நாட்களில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் உடல் நலம்  அப்போலோ மருத்துவமனை அறிக்கை
ரஜினிகாந்த் உடல் நலம் அப்போலோ மருத்துவமனை அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 5:14 PM IST

சென்னை: பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று (செப்.30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரஜினிகாந்த் நேற்று (செப்.30) கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் (aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வீக்கத்தை மருத்துவர் சாய் சதீஷ் அறுவை சிகிச்சை இல்லாத (transcatheter) stent முறையில் சரி செய்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என்ன?... அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்! - Rajinikanth Health Condition

ரஜினிகாந்தின் நலம் விரும்பிகளுக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சையை தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் தற்போது நன்றாக இருக்கிறார். அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.