சென்னை: மைனா, சாட்டை போன்ற படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்சின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக "கா" திரைப்படம் வெளி வருகிறது. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் வைட்லைவ் போட்டோகிராபராக நடித்துள்ளார்.
இதில் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தின் வில்லனாக நடித்த சலீம் கவுஸ், வனத்துறை அலுவலராக நடித்திருக்கிறார். இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் நவீன், கும்கி மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்ற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.
ஆண்ட்ரியா நடிப்பில் தரமணி, விஸ்வரூபம், அரண்மனை, வட சென்னை ஆகிய படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். தற்போது இந்த ’கா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் நாஞ்சில்.
கத்தால கண்ணாலே பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத்தொகுப்பைச் செய்துள்ளார்.
மேலும், சேதுவின் சிறப்பு சப்தமும், தரணி ஒலி கலவை செய்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு 'கா' படத்தின் டிரைலர் வெளியானது. அதன் பிறகு, கா படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 29ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வைட்லைவ் போட்டோகிராபராக காட்டிற்குள் செல்லும் ஆண்ட்ரியா, அந்த காட்டிற்குள் நடக்கும் பிரச்னைகளைக் கடந்து எவ்வாறு வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா.. 2015க்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு!