சென்னை: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் கர்ணூல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைப்பட துறையினர் பலர் நிதி வழங்கி வழங்கி வருகின்றனர்.
முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகக்ளுக்கு தலா 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கல்கி 2898 AD படத் தயாரிப்பாளரான வைஜயந்தி நிறுவனம், ஆந்திரா மாநிலத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியது.
I'm saddened by the loss and suffering caused by the devastating rains in Andhra Pradesh and Telangana. In these challenging times, I humbly donate ₹1 crore in total to the CM Relief Funds of both states to support the relief efforts. Praying for everyone's safety 🙏.…
— Allu Arjun (@alluarjun) September 4, 2024
இதனைத்தொடர்ந்து பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களுக்கும் சேர்த்து 1 கோடி ரூபாயும், நடிகர் பிரபாஸ் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா 1 கோடி ரூபாயும், நடிகர் மகேஷ் பாபு 50 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளார்.
நடிகரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 1 கோடி ரூபாயும், இரு மாநில கிராம பஞ்சாயத்திற்கு 4 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார்? - பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகிறது அறிவிப்பு! - Biggboss season 8