சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை, துபாயில் உள்ள மாடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை கௌரவிக்கும் வகையில், இந்த மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூனின் மெழுகுச் சிலை அவரது பிரபல திரைப்படம் புஷ்பா பட போஸில் உள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்படுத்தினருடன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் மனைவி, மகிழ்ச்சியில் தனது கணவருக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார். இது குறித்து அல்லு அர்ஜுன் மனைவி சினேகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: “வளர்மதியா? தனமா?” - அழகி ரீ-ரிலீஸ் நிகழ்வில் தேவையானி சுவாரஸ்ய கேள்வி! - Actress Devayani Azhagi Rerelease