ஹைதராபாத்: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 175.1 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (டிச.05) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர்.
அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருது வென்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார். இதனைத்தொடர்ந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாள் முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் சாக்னில்க் இணையதளம் அறிக்கையின்படி 175.1 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஆர்.ஆர்.ஆர் (156 கோடி) திரைப்பட சாதனையை முறியடித்தது. மேலும் உலக அளவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்பட முதல் நாள் வசூலான 223 கோடியை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் மொழிவாரியாக முதல் நாள் வசூல் விபரம்
- சிறப்புக் காட்சி - 10 கோடி
- முதல் நாள் வசூல் - 165 கோடி
- தெலுங்கு - 85 கோடி
- தமிழ் - 7 கோடி
- ஹிந்தி - 67 கோடி
- கன்னடம் - 1 கோடி
- மலையாளம் - 5 கோடி
புஷ்பா 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட முதல் நாள் வசூல் ஒப்பீடு
புஷ்பா 2 VS ஆர்.ஆர்.ஆர் Day 1
மொழி | புஷ்பா 2 | ஆர்.ஆர்.ஆர் | |
தெலுங்கு | Rs 85 Cr | Rs 103.13 Cr | |
ஹிந்தி | Rs 67 Cr | Rs 20.07 Cr | |
தமிழ் | Rs 7 Cr | Rs 6.5 Cr | |
மலையாளம் | Rs 5 Cr | Rs 3.1 Cr | |
கன்னடம் | Rs 1 Cr | Rs 0.2 Cr | |
இந்தியா வசூல் | Rs 165 Cr | Rs 133 Cr |
(புஷ்பா 2 சிறப்புக் காட்சி தவிர்த்து ஒப்பீடு)
புஷ்பா 2 முதல் நாள் வசூல் சாதனைகள்
- உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம். ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வசூல் 223 கோடி சாதனை முறியடிப்பு
- இந்திய அளவில் சிறப்புக் காட்சியுடன் சேர்த்து முதல் நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம்
- தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம்
- book my show இணையதளத்தில் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படம் ’புஷ்பா 2’. கல்கி 2898AD திரைப்பட சாதனை முறியடிக்கப்பட்டது
இதையும் படிங்க: 'கெத்து தினேஷ்' முதல் 'லக்கி பாஸ்கர்' ஆண்டனி வரை... 2024ஆம் ஆண்டின் சிறந்த கதாபாத்திரங்கள்!
வரும் வார இறுதி நாட்களில் இந்தியா முழுவதும் ’புஷ்பா 2’ மேலும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்த மாதம் ’விடுதலை 2’ தவிர பெரிய படங்கள் அறிவிப்பு வெளியாகாததால் தமிழிலும் புஷ்பா 2 திரைப்படம் அதிக வசூல் செய்ய வாய்ப்புள்ளது.