ETV Bharat / entertainment

கன்னடத்தில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! - Aishwarya Rajesh debut in Kannada - AISHWARYA RAJESH DEBUT IN KANNADA

Actress Aishwarya Rajesh: கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
Actress Aishwarya Rajesh
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 3:38 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பிடித்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரது நடிப்பில் சமீபத்தில் டியர் திரைப்படம் வெளியானது. அதில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக கறுப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களிலும், இரண்டு மலையாளப் படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா, தற்போது கன்னட திரையுலகிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம், கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது, அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பட பட்டியலில், தி கிரேட் இந்தியன் கிச்சன், வடசென்னை, தேசிய விருது பெற்ற படமான காக்கா முட்டை என பல வெற்றிப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது, அவர் முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 'உத்தரகாண்டா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், சிவராஜ்குமார், டாலி தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: கோவை வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்த பக்தர் பலி.. 2 மாதங்களில் 8 பேர் உயிரிழப்பு! - Velliangiri

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.