தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு தமிழ் நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் என தினந்தோறும் பல அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் படங்களான அரண்மனை 3, பஹீரா, டெடி, காலா, ராஜா ராணி, விஸ்வாசம் என மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகையும், பிக்பாஸ் 3 மூலம் பிரபலமானவருமான சாக்ஷி அகர்வால், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சாக்ஷி அகர்வாலுடன் பக்தர்கள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்து நடிகை சாக்ஷி அஹர்வால் கூறுகையில், “நடிகர்கள் லாரன்ஸ், பாலா போன்றோர் மக்களுக்கு உதவி செய்வது நல்ல விசயம். மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அதைவிட நல்ல விசயம். விஜய் போன்ற இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.
இந்த இளம் தலைவர்களால் நல்லது நடக்கும், என நம்புகிறேன். விஜய் சினிமாவை விட்டு விலகுவது, கஷ்டமாக உள்ளது. மேலும், இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகும் தங்கலான் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன். ஒரு நடிகையான எனக்கு திரைப்படங்கள் மத்தியில் ஓரவஞ்சனை இல்லை. அனைவரும் அந்தகன், ராயன், தங்கலான் என மூன்று படங்களும் பார்க்க வேண்டும்” என்றார்.
![ஈடிவி பாரத் தமிழ் நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-07-2024/22039572_watsapp.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: எனது தந்தை இளையராஜா பற்றிய விமர்சனங்கள்.. யுவன் பளீச் பதில்!