ETV Bharat / entertainment

'தளபதி 69' அப்டேட்... விஜய்க்கு மீண்டும் ஜோடியான பூஜா ஹெக்டே! - pooja hegde in thalapathy 69 - POOJA HEGDE IN THALAPATHY 69

pooja hegde in thalapathy 69: எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்

விஜய்க்கு மீண்டும் ஜோடியான பூஜா ஹெக்டே
விஜய்க்கு மீண்டும் ஜோடியான பூஜா ஹெக்டே (Credits - @KvnProductions X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 2, 2024, 12:14 PM IST

சென்னை: கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக தனது 69வது படத்தை நடிக்கவுள்ளார். ’தளபதி 69’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால், எச்.வினோத் இயக்கும் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இது தனது கடைசி படம் என அறிவித்துள்ளதால் அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் கவனமும் இந்த படத்திற்கு திரும்பியுள்ளது. இந்த படத்தை சமூக கருத்தை கமர்ஷியல் ரீதியாக சொல்லும் எச்.வினோத் இயக்குவது மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இப்படம் எச்.வினோத் ஸ்டைலில் இருக்குமா அல்லது விஜய்யின் அரசியல் பயணத்தை சார்ந்து இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

ஆனால் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே 'The Torch Bearer Of Democracy' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. தளபதி 69 படத்தின் நடிகர்கள் குறித்து நேற்று முதல் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே அனிமல் படம் மூலம் பிரபலமடைந்த பாபி தியோல், கங்குவா படத்திலும் வில்லனாக மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி! - Modi inquired about Rajini health

இந்நிலையில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே ’தளபதி 69’ படத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே விஜய்யுடன் பிஸ்ட் படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடனமாடிய ‘halamithi habibo’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் ’தளபதி 69’ படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.