சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து, சங்கத்தமிழன், டிக் டிக் டிக் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தன்னை பற்றி சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்கள் குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது போன்ற அவதூறுகள் பேசுபவர்களுக்கு குறைந்தபட்சம் மனிதத்தன்மை இருக்கும் மற்றும் இது தொடர்பான தகவல்களை சரி பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். தானும், தன் குடும்பமும் கடந்த சில நாட்களாக இந்த அவதூறு செய்திகளால் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். நல்ல குடும்பத்தில் இருந்து வந்து 16 வயதில் இருந்து பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும், தனது குடும்பம் கடந்த 20 வருடமாக துபாயில்தான் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கூட எந்த தயாரிப்பாளரையும், இயக்குநரையும், கதாநாயகனையும் படத்தில் தன்னை நடிக்க வைக்குமாறு வாய்ப்பு கேட்டது கிடையாது, என்னைத் தேடி வந்த 20 படங்களிலும், பணத்துக்காக வேலை செய்பவர் கிடையாது. தன்னைப் பற்றி பரவி வரும் இந்த அவதூறுகள் அனைத்தும் பொய்யே எனக் கூறியுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து துபாயில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், 2013ஆம் ஆண்டிலிருந்து கார் ரேஸ் எனது பேஷன் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கு சென்னையில் கார் ரேஸ் நடப்பதே தெரியாது, நான் அவ்வளவு முக்கியமான நபர் இல்லை, சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். பல போராட்டங்களுக்குப் பிறகு மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மற்ற பெண்களைப் போல் நல்ல மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.
இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எடுத்துச் செல்லவில்லை. ஏனென்றால் இப்போதும் பத்திரிகைத் துறையில் மனிதத்தன்மை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தன்னைப் பற்றி அவதூறு பரப்ப மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து, அதன் பின்பு வெளியிட வேண்டும். தேவையில்லாமல் தனது குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டாம். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி, உண்மை நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா.. 2015க்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு!