ETV Bharat / entertainment

செம்பருத்தி டீயால் வந்த பிரச்னை.. டாக்டரின் பதிவிற்கு நயன்தாரா சூசக பதில்! - NAYANTHARA Hibiscus Tea issue - NAYANTHARA HIBISCUS TEA ISSUE

Nayanthara: செம்பருத்தி டீ குறித்து நயன்தாரா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு கல்லீரல் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

நயன்தாரா புகைப்படம்
நயன்தாரா (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:05 PM IST

மும்பை: பிரபல நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2, மன்னாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா தனது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரௌடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் நயன்தாரா femi9, 9skin உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது, அது சில நோய்களுக்கு மருந்தாகவும், மழைக் காலங்களில் குடிப்பதற்கு உகந்தது. மேலும் செம்பருத்தி டீயில் அதிக வைட்டமின் இருப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். செம்பருத்தி டீ குடிப்பதால் சீசன் மாற்றத்தால் உடல்நல பாதிப்பு ஏற்படாது” என கூறியிருந்தார்.

செம்பருத்தி டீ குறித்து நயன்தாரா பதிவு
செம்பருத்தி டீ குறித்து நயன்தாரா பதிவு (Credits - Nayanthara instagram page)

இதனைத்தொடர்ந்து கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ், நயன்தாரா பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார். அவரது பதிவில், “நடிகை சமந்தாவை விட அதிகம் பேரால் பின் தொடரப்படும் நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து தவறான கருத்துக்களை பதிவிடக்கூடாது.

நயன்தாரா செம்பருத்தி டீ சுவையாக உள்ளது என்று மட்டும் கூறியிருந்தால் பிரச்னை இல்லை, ஆனால் அதற்கும் மேல் உடல் நலம் குறித்து போதுமான தெளிவு இல்லாமல் தெரியாததை பேசியுள்ளார். மேலும், செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது . காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது என கூறியுள்ளார். அவை அனைத்தும் நிரூபிக்கப்படாதவை” என கூறியுள்ளார்.

கல்லீரல் மருத்துவரின் இந்த கடுமையாக எதிர்ப்பிற்கு பிறகு நயன்தாரா செம்பருத்தி டீ குறித்த பதிவை நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஃபிலிப்ஸ், "பதிவு நீக்கப்பட்டது, ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. மேலும், இந்த செயல் பொது சுகாதாரத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல உள்ளது. சினிமா பிரபலங்கள் இவ்வாறு மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும்" என கூறியுள்ளார்.

பின்னர் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாதிடாதீர்கள், அவர்கள் உங்களை அவர்களின் நிலைக்கு இழுத்து, பின்னர் அவர்களின் அனுபவத்தால் உங்களை அடிப்பார்கள்” என பதிவிட்டுள்ளார். இதேபோல் சில நாட்களுக்கு முன்னதாக சுவாசப் பிரச்னைக்கு சிகிச்சையாக நெபுலைசர் பயன்படுத்தலாம் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மருத்துவர் ஒருவர், இவ்வாறு மக்களை தவறாக வழிநடத்தும் சமந்தாவிற்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சமந்தாவை தொடர்ந்து தற்போது நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து பதிவிட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தனுஷுக்கும் கட்டுப்பாடு?.. களத்தில் இறங்கிய நடிகர் சங்கம்.. படப்பிடிப்பு நிறுத்ததிற்கு கடும் எதிர்ப்பு! - Nadigar Sangam

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.