ETV Bharat / entertainment

கேரளா ஸ்டாருடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா! கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவின் அடுத்த மூவி - MAMMOOTTY AND NAYANTHARA FILM - MAMMOOTTY AND NAYANTHARA FILM

Mammootty and Nayanthara: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் மம்முட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 12:34 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா அன்னபூரணி: தி காட் ஆஃப் ஃபுட் என்ற படத்தைத் தொடர்ந்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் மலையாள முன்னணி நடிகரான மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ரொமாண்டிக் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாததால், இப்படம் மலையாள படமா? அல்லது தமிழ் படமா? என ரசிகர்கள் குழம்பி உள்ளனர். ஒருவேளை இப்படம் உறுதியாகி விட்டால், கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

ஏற்கனவே நயன்தாராவும், மம்முட்டியும் இணைந்து நடித்திருந்த பாஸ்கர் தி ராஸ்கல், ராப்பகல், வாசுகி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜாவை சமாளித்து படம் எடுத்தாரா? - இயக்குநர் பாக்யராஜ் கூறுவது என்ன? - Director Bhagyaraj About Ilayaraja

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.