ETV Bharat / entertainment

கணவருடன் புது வீட்டில் குடியேறிய நடிகை ஹன்சிகா... புகைப்படங்கள் வைரல்! - ACTRESS HANSIKA MOTWANI

Actress hansika motwani: பிரபல நடிகை ஹன்சிகா தனது கணவருடன் புதிய வீட்டில் குடியேறிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புது வீட்டில் குடியேறிய நடிகை ஹன்சிகா
புது வீட்டில் குடியேறிய நடிகை ஹன்சிகா (Credits - Hansika Motwani Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 4:39 PM IST

சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா தான் புதியதாக கட்டிய வீட்டில் தனது கணவரோடு குடியேறிய புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் ஒளிபரப்பான ‘shaka laka boom boom’ தொடரில் நடித்தார். இதனைத்தொடர்ந்து தெலுங்கு மொழியில் ’தேசமுதுரு’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் கன்னட படத்தில் நடித்த ஹன்சிகா, தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா ‘குட்டி குஷ்பு’ என பெயர் பெற்றார். பின்னர் 2012இல் வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து மான் கராத்தே, வாலு, சிங்கம் 2, தீயா வேலை செய்யனும் குமாரு, வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன், மீகாமன், அரண்மனை 2 என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார். மேலும் ஃபிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆண்கள் அணியால் கண் கலங்கிய தர்ஷா; ஆதரவாக பேசிய விஷால்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு சோஹே கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரை மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தான் கட்டியுள்ள புது வீட்டின் கிரஹப்பிரவேச புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் நடிகை ஹன்சிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.