ETV Bharat / entertainment

'அரசியலில் விஜய்க்கு எனது ஆதரவு கண்டிப்பாக இருக்கும்' - பரியேறும் பெருமாள் பட நடிகை பேட்டி - Kayal anandhi about vijay politics - KAYAL ANANDHI ABOUT VIJAY POLITICS

Kayal anandhi about vijay politics: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எப்போதும் என்னுடைய ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

நடிகை ஆனந்தி புகைப்படம்
நடிகை ஆனந்தி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 7:29 AM IST

திருச்சி: கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி, சண்டி வீரன், பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா‌ நயன்தாரா, கமலி ஃப்ரம் நடுக்காவேரி, கஸ்டடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் இவரது நடிப்பில் பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற ‘பொட்ட காட்டில் பூவாசம்’ உள்ளிட்ட பல பாடல்கள் மிகவும் பிரபலம். மேலும் பல்வேறு துணிக்கடைகள், நகைக்கடைகள், அழகு நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

நடிகை ஆனந்தி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கயல் பட நடிகை ஆனந்தி திருச்சியில் நடைபெற்ற தனியார் அழகு நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், "சினிமா படப்பிடிப்பிற்காக பல முறை திருச்சி வந்துள்ளேன். திருச்சி எனக்கு எப்போதும் மறக்க முடியாத ஒரு இடமாக அமைந்துள்ளது. திருச்சியில் கிடைக்கும் உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

இதையும் படிங்க: இதுக்காக எல்லாம் அப்படி நினைச்சிட முடியாது.. விஜயின் மேடைப்பேச்சு பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவதென்ன? - Vijay Political Speech

சரியான கருத்துகளைப் பேச வேண்டும் - கயல் ஆனந்தி: பின்னர் நடித்து வரும் படங்கள் குறித்த கேள்விக்கும், தற்போது தெலுங்கில் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறேன். நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் எனக் குறைந்த அளவில் படங்களில் நடித்து வருகிறேன் என்றார். இன்றைய தலைமுறையினர் சிலர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தவறான ரீல்ஸ் செய்து சிக்கி கொள்வது குறித்த கேள்விக்கு, நான் சமூக வலைதளங்களை பெரிதாக பயன்படுத்துவது இல்லை. யாராக இருந்தாலும் பேசுவதற்கு முன்‌ புரிந்து சரியான கருத்துகளைப் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

விஜய்க்கு எனது ஆதரவுகள்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், என்னுடைய ஆதரவு கண்டிப்பாக நடிகர் விஜய்க்கு இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியன் 4-ம் பாகம்? சித்தார்த் உடைத்த ரகசியம்! - Siddharth about Kamal Haasan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.