ETV Bharat / entertainment

ஜீவி வெற்றி - பிரபு காம்போவில் உருவாகும் ‘ஆண்மகன்’! - Actors Vetri Prabhu combo aanmagan - ACTORS VETRI PRABHU COMBO AANMAGAN

Aanmagan: இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில், நடிகர் வெற்றி மற்றும் பிரபு இணைந்து ஆண்மகன் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

நடிகர் பிரபு மற்றும் வெற்றி புகைப்படம்
நடிகர் பிரபு மற்றும் வெற்றி புகைப்படம் (credit to vikram prabhu x page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 8:11 PM IST

சென்னை: இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில், நடிகர் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் ஆண்மகன். இப்படத்திற்கு கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார். மேலும், நவ்பல் ராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதி உள்ளார். டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்தப் படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில், இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஆலிவர் டெனி பணிபுரிகிறார். படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெற்றி நடிப்பில் வெளியான பம்பர், ஜீவி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - இவானா நடிப்பில் வெளியான 'கள்வன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Kalvan OTT Release Date

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.