ETV Bharat / entertainment

ராசி இல்லாதா நடிகர்களா?... 'ப்ளூ ஸ்டார்' படம் மூலம் புத்துயிர் பெற்ற நடிகர்கள்! - நடிகர் அசோக் செல்வன்

Blue Star Movie: ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான 'ப்ளூ ஸ்டார்' படத்தின் மூலம் நடிகர் சாந்தனு மற்றும் ப்ரித்வி ஆகிய இருவரும் எவ்வாறு புத்துயிர் பெற்றனர் என்பதை சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தி.

Blue Star Movie
'ப்ளூ ஸ்டார்' படம் மூலம் புத்துயிர் பெற்ற நடிகர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 7:56 PM IST

Updated : Feb 2, 2024, 10:46 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை என்பது சற்று அதிகம்தான். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை ஆகியோரின் வாரிசுகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அப்படி வருபவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்களா? என்றால் கேள்விக்குறி தான். என்னதான் வாரிசு என்ற முன்னுரிமையில் வந்தாலும், திறமையும் கடின உழைப்பும் இருந்தால் தான் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியும்.

விஜய், சூர்யா, கார்த்தி இவர்கள் எல்லாம் தங்களது அப்பாவின் தயவில் வந்தாலும், தங்களது கடின உழைப்பு மற்றும் திறமையால் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்றனர். இதுபோல அருண் விஜய் எப்போதே தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார்.

அப்படி இன்னும் நிறைய பேர் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர், திரைக்கதை மன்னன் என்று பாராட்டப்படுபவர் பாக்யராஜ். தனது படங்களில் வித்தியாசமான திரைக்கதை மூலம் அனைவரையும் ரசிக்க வைத்தவர். இப்படி பல வெற்றிப் படங்களை கொடுத்தவரின் மகன் தான் சாந்தனு. சினிமா ஆசையால் தனது அப்பா இயக்கிய 'வேட்டிய மடிச்சு கட்டு' படத்தில் சிறுவனாக அறிமுகமானார்.

பின்னர் வளர்ந்ததும் 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பு, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசை என மிகப் பிரமாண்டமான முறையில் வெளியான அப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு சித்து +2, தங்கர் பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி, பார்த்திபன் இயக்கத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

ராசியில்லாத நடிகர் என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்தது திரைத்துறை. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதனால் நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவரது ராவண கோட்டம் படமும் இவருக்கு தோல்விப் படமாக அமைந்தது.

இந்த நிலையில் ஜெயக்குமார் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' (Blue Star) திரைப்படம் சாந்தனுவுக்கு நம்பிக்கை தரும் படமாக வந்துள்ளது. தற்போது இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார் சாந்தனு.

நீண்ட வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனை அவர் கொண்டாடி வருகிறார். என்னதான் நம்மிடம் திறமை இருந்தாலும், அதனை வெளிப்படுத்த சரியான இடம் தேவை என்பதை ப்ளூ ஸ்டார் படம் நிரூபித்துள்ளது. இதனால் சாந்தனு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். அதேபோன்று இயக்குனர் பாண்டிராஜன் மகன் ப்ரித்வி பாண்டியராஜன்.

சாந்தனுவை போலவே அப்பாவின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர். அவரது இயக்கத்தில் கை வந்த கலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படமும் அதற்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை. இதனால் இவரும் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தில் ப்ரித்வியின் கதாப்பாத்திரமும் நடிப்பும் பேசப்படும் அளவிற்கு உள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது காமெடி கலந்த ஷ்யாம் கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்துள்ளது எனலாம்.

இந்த வெற்றியின் மூலம் தனது அப்பாவின் பெயரை காப்பாற்றியுள்ளார் என்று கூட சொல்லலாம். ஒரு கதையும் திரைக்கதையும் தான் ஒரு நடிகரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த உதவும் முக்கியக் காரணி என்று இதன் மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க: தங்கானூரில் களைகட்டிய சேவல் சண்டை..பொங்கலில் சேவல் சண்டை நடத்த அரசுக்கு கோரிக்கை

Last Updated : Feb 2, 2024, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.