ETV Bharat / entertainment

கோட் படத்தில் மறைந்த பவதாரணியின் குரல்: AI மூலம் படக்குழு உருவாக்கம்.. - goat 2nd single promo released

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:32 PM IST

THE G.O.A.T : இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோட் படத்தின் 2வது சிங்கிள் சம்பந்தமான போஸ்டர்
கோட் படத்தின் 2வது சிங்கிள் சம்பந்தமான போஸ்டர் (Credits - archana kalpathi X page)

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், நாளை விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கோட் படத்தின் 2வது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலின் ப்ரோமோவை இன்று வெளியிட்டுள்ளது.

இப்பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பாடச் செய்துள்ளனர். பாடல் வரிகளை பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கோட் படத்திலிருந்து விசில் போடு பாடல் கடந்த ஏப்.14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடகி பவதாரிணி கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் பிறந்தநாளுக்கு சின்ன டிரீட்.. 'கோட்' படத்தின் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி! - GOAT Movie Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.