ETV Bharat / entertainment

கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதி... பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு! - vijay sethupathi - VIJAY SETHUPATHI

bigg boss vijay sethupathi: பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி (Credits - @vijaytelevision X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 7:06 PM IST

சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ’பிக்பாஸ்’. (Bigg Boss) பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்தவித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும், கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் பாலிவுட்டில் பிரபலமானது. சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானது. தமிழில் ஆரம்பம் முதல் பிரபல நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம் பெரும் வரவேற்பை பெற்றது. வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் டிவி முன் ஆர்வத்துடன் அமர்ந்தனர். இந்நிலையில் தனது படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் 8வது சீசனிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கப் போகும் நட்சத்திரம் யார் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மேலும் விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரசிகர்களை ஹைப் ஏற்றும் வகையில் கோட் படக்குழு வெளியிட்ட கடைசி ஸ்பெஷல் அப்டேட்! - GOAT last update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.