சென்னை: இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படத்தை பேஸன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மகாராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாய்ஸ் மணிகண்டன், நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மறைந்த ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "ராமோஜி ராவ் மரணம் ரொம்ப வருத்தமாக இருந்தது. அவருடைய செட்டில் எல்லாமே இருக்கும். அவர் உயிரிழந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்போது பெரிய பாரம் இல்லாததால் எங்குப் படுத்தாலும் தூங்கி விடுவேன். அப்படி நிறைய இடங்களில் தூங்கி இருக்கேன். நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன்.
இந்த படத்தின் கதையைப் பார்க்கும் போது, அவர் உங்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் அனுபவம் அதைத் தான் இயக்குநர் பாதுகாக்கிறார். முடிந்த அளவுக்கு கதையைச் சொல்லாமல் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். சீதக்காதி என் 25வது படமாக அமைந்தது என் வாழ்வின் பாக்கியம்.
மகாராஜாவும் அதே போலத்தான். என் குருநாதர் சீனு ராமசாமிக்கு நன்றி. என்னை நானே நம்பாத பொழுது, இக்கட்டான சூழ்நிலையில் என்னை வைத்து படம் இயக்கிய அவருக்கு நன்றி. எல்லோரிடமிருந்தும் நான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறேன்.
விமர்சனங்களையும், பாராட்டையும் சமமாகப் பார்க்கிறேன். நான் துபாயில் இருக்கும் போது, 5 ஸ்டார் & பாய்ஸ் படத்துக்கு நடிக்க போட்டோ அனுப்பியிருந்தேன். பெரிய பூதம், பேய் என்றால் அது வாழ்க்கை தான். நேற்று இருந்த நொடி இன்றைக்கு இல்லை. அடுத்த நொடி கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் கூறினார்.
மகாராஜா மகாராணியுடன் இருந்தால் நாட்டை யார் தான் ஆள்வது? மகாராஜா என்று டைட்டிலை வைத்ததே, ஒரு முடி திருத்தும் தொழிலாளியின் கதைக்காக வைத்தது. நித்திலனுக்கு மறைத்துப் பேச தெரியாது. இங்கு ஒரு கம்பெனியில் 3500 ரூபாய்க்கு வேலை பார்த்தேன். பிறகு துபாயில் வேலை கிடைத்ததால், பாஸ்போர்ட் இல்லை என்பதால் கமிஷ்னர் ஆபிஸ் போய் சொன்னேன் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
பெரிய கனவுகளோடு போனேன். நான் நினைத்த அளவுக்கு வாழ்க்கை மாறவில்லை. இளமை காலத்தில் கனவு இளமையாக இருக்கும். துபாயின் தெருக்களில் சுற்றி ஏங்கி இருக்கேன். காசை செலவழித்தால் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியாது. அந்த நியாபகங்கள் தான் வந்தது. ஒவ்வொரு நாள் பின்னாடியும் வேறொரு நாளுக்காக உழைத்திருக்கிறேன். பல வருடங்கள் கழித்து அதே துபாயில், புர்ஜ் கலிபாவில் இந்த படத்தின் போஸ்டர் வந்தது என பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இங்கு சரி எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு கதையை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம். எது மக்களின் ரசனை என்று தெரிய வேண்டும். எல்லா படமும் முக்கியமான படம் தான். சில படங்களைக் கதை தீர்மானிக்கிறது. சில கதைகள் ரொம்ப ஆர்வமாக இருக்கும். அந்த அனுபவம் நன்றாக இருக்கும்.
200 கோடி, 1000 கோடி எல்லாம் பார்க்கவில்லை. வெற்றியும், தோல்வியும் ஆராய்ந்து பார்ப்பது சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். 96 படம் வெற்றி பெற்ற போதும், அந்த இயக்குநரிடம் போன் பண்ணி என் தவறுகளைப் பற்றியும் கேட்டேன்.
50வது படமாக இருந்தாலும் ஒரு நடிகனாக நிறைவடையவில்லை. நமக்கே நிறைய கேள்விகள் இருக்கிறது கலை என்பது எவ்வளவு தேடினாலும் அது அமிர்தம் வந்து கொண்டே இருக்கும். கடைசி விவசாயி ரொம்ப கஷ்டமான படம். அதை பண்ண நிறைய கஷ்டப்பட்டேன். அந்த படம் பண்ணும் போதே ரொம்ப மெனக்கெட்டு பண்ணினேன்.
சூப்பர் டீலக்ஸ் படத்தையும், குமாரராஜா படத்தையும் நம்பி செய்தேன். நான் 2013, 14,15 காலகட்டத்தில் ரசிகர்களைச் சந்தித்து வந்தேன். ஆனால் பலரும் தூரத்திலிருந்து வருவதால் சிரமங்களைத் தவிர்க்கத் தான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவதில்லை.
அனுராக் காஷ்யப் தான் முதன் முதலில் ஹிந்தி படத்துக்கு அழைத்தார். இந்த படத்தை எனக்காகப் பண்ணிக் கொடுத்தார். அவரும் ஒரு இயக்குநர் என்பதால் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்தில் அமைந்த அனைத்து கதாபாத்திரங்களும் கிடைத்த வரம் தான். மக்கள் செல்வன் என்று சொல்லும் போது கேட்க நன்றாக இருக்கிறது.
என் எக்ஸ் தளத்தில் பார்த்தால் என் படங்களை விட மற்றவர்கள் படங்கள் தான் இருக்கும். நிறையப் பேரை பல நேரங்களில் சந்திக்க முடியாத சூழல் இருந்திருக்கலாம். எனக்குப் பிடிக்க வேண்டும். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மாதிரி அமைய மாட்டிங்குது. நானும் அதற்கு ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் காமெடியன் ரோல்? சூரி அளித்த ‘நச்’ பதில்! - Actor Soori