ஹைதராபாத்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின தலைவருமான விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் "கோட்" (Greatest Of All Time). ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
அங்கு விஜய்க்கு விமானநிலையம் முதல் படப்பிடிப்பு தளம் வரை ஏராளமான ரசிகர்கள் கூடி அவருக்கு உற்சாக வரவேற்ப்பை அளித்தனர். இதனிடையே படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த விஜய் மலையாளத்தில் பேசியது உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் வைராலானது.
மேலும், கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் பகிரப்பட்டன. இருப்பினும் படக்குழு தரப்பில் இது குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை. அண்மையில் படத்தின் முதல் சிங்கிள் மே மாதம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: "என்ட சேட்டன் சேச்சிமாரே" - கேரளாவில் மீண்டும் மாஸ் காட்டிய விஜய்.. வைரலாகும் செஃல்பி வீடியோ!
கேரளாவில் படப்பிடிப்பை மேற்கொண்டு வரும் கோட் படக்குழுவினர், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் உருவாகவும் இப்படம் அறிவியல் புனைவு கைதையை மையமாகக் கொண்டு உருவாவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, வைபவ், மோகன் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவை சித்தார்த்த நுனி மேற்கொண்டு வருகிறார் மற்றும் படத்தொகுப்புப் பணிகளை வெங்கட் ராஜன் செய்கிறார்.
கோட் படத்தின் மூலம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இடம் பெறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்தவகையில், இருவரையும் வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் எஸ்.ஜெ.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், வசந்த் சாய், விக்கரமன், எழில், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோர் ஆவர்.
கேரள மாநிலத்தில் நடிகர் விஜய்க்கென்று என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காகக் கேரளா சென்ற நடிகர் விஜய், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடு ஜீவிதம்:'16 ஆண்டுகளாக நடந்த சூட்டிங்..இது வெறும் கதையல்ல; ஒரு மனிதனின் வாழ்க்கை' - நடிகர் பிருத்விராஜ்