ETV Bharat / entertainment

SK 23ல் முருகதாஸ் உடன் மீண்டும் இணைந்த பிரபல வில்லன்! யார் தெரியுமா? - actor Vidyut Jammwal starrer in SK23 - ACTOR VIDYUT JAMMWAL STARRER IN SK23

SK 23: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க உள்ளதாக படக்குழு தற்போது வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், வித்யூத் ஜம்வால் புகைப்படம்
ஏ.ஆர்.முருகதாஸ், வித்யூத் ஜம்வால் புகைப்படம் (credits - sivakarthikeyan x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 10:04 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான தீனா, ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதனைத்தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படமாகும். தற்காலிகமாக 'SK 23' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், சஞ்சய் தத், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்ரீலட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இது மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. இதில், ராணுவ வீரராக நடிப்பதால், உடல் எடையைக் கூட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதே தோற்றத்தில் தான் முருகதாஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க உள்ளதாக படக்குழு தற்போது வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. வித்யூத் ஜம்வால் இதற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

துப்பாக்கி படத்தில் அவரது நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது. விஜய் மற்றும் வித்யூத் ஜம்வால் இடையேயான காட்சிகள் மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. அதே போல், இந்த படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மீண்டும் முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் படத்தில் வித்யூத் ஜம்வால் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து! - actor premji marriage

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.