ETV Bharat / entertainment

”காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதால் நடிகர் சங்கம் செயல்படாமல் உள்ளது” - நடிகர் உதயா குற்றச்சாட்டு! - Actor udhaya about nadigar sangam - ACTOR UDHAYA ABOUT NADIGAR SANGAM

Actor udhaya criticizes nadigar sangam: நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நிரந்தரமாக நீக்கிவிட்டார்கள் என நடிகர் உதயா குற்றம்சாட்டியுள்ள நிலையில், நடிகர் சங்கம் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என கூறியுள்ளார்.

நடிகர் உதயா செய்தியாளர் சந்திப்பு
நடிகர் உதயா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 12:59 PM IST

சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சகோதரரும், நடிகருமான உதயா தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிரந்தரமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் உதயா பேசுகையில், "கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது பொதுச் செயலாளர் விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார். ஒரு பொதுச் செயலாளர் இவ்வாறு பேசலாமா? விஜயகாந்த் கடனிலிருந்து மீட்டு தான் நடிகர் சங்கத்தை நடத்தினார்.

ஆனால் இவர்கள் கடன் வாங்கி கட்டிடம் கட்டுகிறார்கள். நடிகர் சங்கம் கடன் வாங்காமல் செயல்பட வேண்டும் என்று ட்வீட் போட்டதற்கு என்னை ஆறு மாதம் தற்காலிக நீக்கம் செய்தனர். இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நீண்டு கொண்டே போனது. அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் எழுதிய இயக்குநர் பாக்யராஜையும் நீக்கம் செய்துள்ளனர். என்னுடைய ஆறு மாத தற்காலிக நீக்கம் முடிந்தது என்று நினைத்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு சலசலப்பு ஏற்பட்டு, போலீசார் வந்ததால் அங்கிருந்து சென்று விட்டேன்.

நடிகர் உதயா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இன்று என்னை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனர். நான் என்னுடைய உறுப்பினர் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். அதற்காக என்னை நிரந்தரமாக நீக்குவதா? இவ்வளவு நாள் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லாம் என்னை நீக்காமல் இப்போது என்னை நீக்குவதற்கான காரணம். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பயமா? எனக்கு உறுப்பினர் உரிமை தேவை இல்லை. ஆனால் இவர்கள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை நீக்கியதால் நான் வாங்கி கொடுத்த ரூ.3 கோடி பணத்தை திரும்ப தருவார்களா? என்று‌ கேள்வி எழுப்பினார்.

மேலும் நான் கரோனா காலத்தில் நடிகர் லாரன்ஸ் மாஸ்டரிடம் 25 லட்சம் பணம் வாங்கி நாடக நடிகர்களுக்கு உதவினேன். என்னை மட்டுமில்லாது பாபி என்ற நடிகரையும் நிரந்தரமாக நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் செய்வதை பார்க்கும் போது சரத்குமார், ராதா ரவியே பரவாயில்லை என்று தோன்றுகிறது. தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். நடிகர் சங்க தலைவராக உள்ள நாசராலேயே பேச முடியவில்லை.

மேலும் தேர்தல் வேண்டும் என்று சொல்கின்ற அனைவரையும் நீக்கம் செய்வீர்களா? நான் என்னை நீக்கம் செய்ததற்கு விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர். நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என்ன தவறு செய்தேன். நடிகர் தனுஷிற்கு உதவி செய்தல், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு கமிட்டி அமைத்தல் இது அனைத்தும் தேர்தல் நேரத்தில் செய்கிறார்கள். இறந்த நடிகர்களுக்கு ஈமச் சடங்கு செய்வது முதல் அனைத்தும் தனிப்பட்ட முறையில் தான் செய்கிறார்களே தவிர, ஒரு சிலருக்கு மட்டுமே சங்கம் உதவி செய்கிறது.

இதையும் படிங்க: காற்றில் கலந்த காந்தக் குரல், பாடும் வானம்பாடி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள் ஸ்பெஷல்! - SP Balasubrahmanyam

நடிகர் விஷால் நல்லவர்கள் உள்ளே வந்து விட்டார்கள், கெட்டவர்கள் வெளியே சென்று விட்டார்கள் என்று கூறினார். இதில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? தொடர்ந்து இது போல காழ்ப்புணர்ச்சியுடன் செயல் படுவதாலேயே நடிகர் சங்கம் செயல்படாமல் உள்ளது. என்னை பொறுத்தவரை எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.