ETV Bharat / entertainment

"விஜய் என்ன நல்ல விசயம் பண்ணாலும் நான் அங்க இருப்பேன்" - நடிகர் தாடி பாலாஜி உறுதி! - Actor Thaadi Balaji - ACTOR THAADI BALAJI

Actor Thadi Balaji: திருவள்ளூரில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த நடிகர் தாடி பாலாஜி, தவெகவின் அனைத்து நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வேன் எனவும், விஜய் எந்த நல்ல விஷயம் செய்தாலும், அங்கு நான் கண்டிப்பாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Actors Thadi Balaji, Vijay
நடிகர் தாடி பாலாஜி, விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 12:14 PM IST

நடிகர் தாடி பாலாஜி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் தாடி பாலாஜி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி போன்றவற்றை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் தாடி பாலாஜிக்கு, தவெக தொண்டர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்று தாடி பாலாஜியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் தாடி பாலாஜி, “கடுமையான வெயிலால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் எங்கு பார்த்தாலும் பொது மக்களுக்கு சிறப்பாக உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இங்கு நட்பு ரீதியாக வந்திருக்கிறேன்.

விஜய் எந்த நல்ல விஷயம் எது செய்தாலும் அங்கு தாடி பாலாஜி கண்டிப்பாக வந்து நிற்பேன். இவர்கள் பொதுமக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் அனைவரும் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். விஜய் மற்றும் விஜயின் அப்பா எனக்கு நிறைய உதவிகள் செய்து உள்ளனர். இதன் மூலம் எனது நன்றி கடனை கண்டிப்பாக செய்வேன். தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வேன்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தற்போது திமுக ஆட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது. சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். ஆட்சி குறித்து மார்க் போட நான் என்ன வாத்தியாரா? மக்களுக்கு எந்த கட்சி நல்லது செய்கிறதோ? அந்த கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நற்பணி இயக்கத்தைப் பலப்படுத்தும் நடிகர் சூர்யா.. அரசியலுக்கு அடித்தளமா? - Actor Suriya In Politics

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.