ETV Bharat / entertainment

வெளியான பாபி தியோலின் மிரட்டல் லுக்: புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த கங்குவா படக்குழு..! - actor surya

Bobby Deol look on Kanguva Movie: பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தில் அவரது மிரட்டலான லுக்கை இன்று (ஜன.27) வெளியிட்டுப் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கங்குவா படத்தில் பாபி தியோலின் மிரட்டல் லுக்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 6:05 PM IST

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'எதற்கும் துணிந்தவன்'. அதற்குப் பிறகு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்திற்கு 'கங்குவா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி படத்தில் சூர்யாவின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டது. அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சூர்யா இந்தப் படத்தில் பல தோற்றங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, "கங்குவா எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என சூர்யா அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று(ஜன.27) கங்குவா படத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று‌(ஜன.27) பாபி தியோலின் பிறந்தநாள் என்பதால் படத்தில் அவரது தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மிரட்டலான லுக்கில் இருக்கும் பாபி தியோலின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின்‌ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கங்குவா திரைப்படம் தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் கதையாகவும், பண்டைய காலத்தில் நடக்கும் கதையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இப்படத்தை மிகவும் கவனமுடனும் விறுவிறுப்பாகவும் எடுத்து வருகிறார். இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிமல் படத்தின்‌ மூலம் தென்னிந்தியாவிலும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுள்ள பாபி தியோலுக்கு, கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "என் அப்பா சங்கி இல்லை" - லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.