ETV Bharat / entertainment

இது வெங்கட் பிரபு கேம்.. எஸ்கே உடன் இணையும் அடுத்தடுத்த டாப் இயக்குநர்கள்! - Sivakarthikeyan venkat prabhu - SIVAKARTHIKEYAN VENKAT PRABHU

Sivakarthikeyan - Venkat Prabhu combo: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு புகைப்படங்கள்
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு புகைப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 3:17 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சாய் பல்லவி அமரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ருக்மணி வசந்த், சஞ்சய் தத், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது மிகப்பெரும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது சிவகார்த்திகேயனின் 24 அல்லது 25வது படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த 'புறநானூறு' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், அது இவரின் 25வது படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தாம் அடுத்ததாக இயக்க உள்ளதை இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தங்கலான் பட வெற்றி விருந்து விழா; படக்குழுவினருக்கு உணவு பரிமாறி அசத்திய விக்ரம்! - Thangalaan success meet

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.