ETV Bharat / entertainment

"போர் செல்லும் வீரன்" - சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு! - sivakarthikeyan amaran making video - SIVAKARTHIKEYAN AMARAN MAKING VIDEO

sivakarthikeyan amaran making video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள 'அமரன்' படத்தின் ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

அமரன் ஸ்பெஷல் வீடியோ காட்சி
அமரன் ஸ்பெஷல் வீடியோ காட்சி (Credits - Raaj Kamal Films International X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 10:22 AM IST

சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்தின் கதை தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள 'அமரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியானது. அப்போது ரசிகர்கள் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உடல் அமைப்பை மாற்றி கடினமாக உழைப்பை செலுத்தியுள்ளதாக பாராட்டினர்.

இதனைத்தொடர்ந்து நடிகை சாய் பல்லவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது. தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சாய் பல்லவி அமரன் பட டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் நாளை (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று அமரன் படக்குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலின் போது சந்திக்கும் சவால்கள், அவர்களுக்கு ஏற்படும் காயங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் 'அணு விதைத்த பூமியிலே' பாடல் இடம் பெற்றுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு அமரன் படத்துடன் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்ஸ்' படம் வெளியாகிறது. மேலும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சத்யராஜின் MY Perfect Husband வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்! - MY Perfect Husband series trailer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.